விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி நடித்து வந்த ஆர் ஜே.பாலாஜி, எல்கேஜி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் . அதன் பிறகு மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கியவர், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது சூர்யா நடிக்கும் 45வது படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார். இப்படியான நிலையில் இன்று ஆர்.ஜே .பாலாஜி ஹீரோவாக நடித்திருக்கும் சொர்க்கவாசல் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டரில் ஒரு பெரிய படிக்கெட்டில் கைதிகள் நிற்கிறார்கள் . அதில், மத்திய சிறைச்சாலை மெட்ராஸ் #002573 1999 என்று எழுதப்பட்ட ஸ்லேட் ஒன்றை கையில் பிடித்தபடி ஆர். ஜே. பாலாஜி நின்று கொண்டிருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை சித்தார்த் விஸ்வந்த் இயக்குகிறார். சஸ்பென்ஸ் நிறைந்த படமாக உருவாகி வருகிறது.