லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கிர்த்தி ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ' எல்.ஐ.கே' (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி கதையில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதிகட்ட பணிகளில் உள்ளது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த அனிருத் பாடிய தீமா பாடல் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் இந்த படத்தை அடுத்த வருட சம்மருக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.