கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியை சேர்ந்தவர் நிகிதா போர்வால். அந்த மாநிலத்தின் முன்னணி தொலைக்காட்சி நடிகையாகவும், தொகுப்பாளராகவும் உள்ளார். 18வது வயதில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 60க்கும் மேற்பட்ட டி.வி தொடர்களில் நடித்துள்ளார். தற்போது அவர் மிஸ்.இந்தியா போட்டியின் மூலம் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மிஸ் இந்தியா 2024ம் ஆண்டு அழகி போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில், மாநில அளவில் வெற்றி பெற்ற 30 அழகிகள் கலந்து கொண்டனர். பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 'மிஸ் இந்தியா 2024' பட்டத்தை நிகிதா போர்வால் பெற்றார். தாத்ரா நகர் ஹைவேலியை சேர்ந்த ரேகா பாண்டே 2-வது இடத்தையும், குஜராத்தை சேர்ந்த ஆயுஷி தோலாக்கியா 3-வது இடத்தையும் பிடித்தனர். கடந்த ஆண்டு மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்ற நந்தினி குப்தா நிகிதாவுக்கு கிரீடம் சூட்டி கவுரவித்தார். முன்னாள் மிஸ் இந்தியா அழகியும், நடிகையுமான நேகா தூபியா, நிகிதா போர்வாலுக்கு சால்வை அணிவித்தார்.
மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்றது குறித்து நிகிதா கூறுகையில், “இந்த உணர்வு என்னால் விவரிக்க முடியாததாக இருக்கிறது. கிரீடத்தை அணிந்து கொள்வதற்கு முன்பு நான் உணர்ந்த நடுக்கங்கள் இன்னும் என்னை விட்டு அகலவில்லை.எனது பயணம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. சிறப்பான விஷயங்கள் இனிமேல்தான் வர இருக்கின்றன" என்றார்.
மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதன் மூலம் நிகிதா போர்வால் 73-வது உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார்.