ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
இயக்குனர் நெல்சன் முதல் முறையாக பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படம் 'ப்ளடி பெக்கர்'. நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் ஹீரோவாக கவின் நடித்துள்ளார். இதற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் இவ்வருட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி அன்று வெளியாகிறது. இதே நாளில் சிவகார்த்திகேயனின் 'அமரன்' மற்றும் ஜெயம் ரவியின் 'பிரதர்' என இரு படங்களுடன் கவினின் 'ப்ளடி பெக்கர்' படமும் மோதுகிறது. இந்த நிலையில் அமரன் படத்தின் இசை வெளியீடு நாளை (அக்டோபர் 18) நடைபெறுகிறது. அதேநாளில் அதன் டிரைலரும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதை தொடர்ந்து இப்போது கவினின் 'ப்ளடி பெக்கர்' பட டிரைலரும் அக்.18ம் தேதி அன்று வெளியாகிறது என அறிவித்துள்ளனர். தீபாவளி பட போட்டி டிரைலரில் இருந்து துவங்குகிறது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.