சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் , இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல வெற்றி படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் லியோ ஜான் பால். இவர் இயக்கும் முதல் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வந்தார். இந்த படத்திற்கு ‛ககன மார்கன்' என பெயரிட்டுள்ளனர். ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் 'காற்றின் வழி பயணிப்பவன்' என்று பொருளாம்.
இதில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஒரு மர்மமான கொலையை பின்னணியாக வைத்து கிரைம் திரில்லர் படமாக இல்லாமல் புதிய வகையான கதாபாத்திரங்கள், தமிழ் பாரம்பரிய மரபு சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய வித்தியாசமான புலனாய்வு படமாக உருவாகி வருகிறது. படத்தில் அண்டர் வாட்டர் தொடர்பான முக்கிய காட்சி உள்ளதால் அதனை மும்பையில் வைத்து படமாக்கி உள்ளனர்.
அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளார்கள். தீப்ஷிகா, கலக்கப்போவது யாரு புகழ் அர்ச்சனா, கனிமொழி, அந்தகாரம் நட்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். விஜய் ஆண்டனி இசையமைத்து, தயாரித்துள்ளார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உளள நிலையில் மற்ற பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.