சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி |
ரஜினி நடிப்பில் தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அதை எடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க இருந்தார். ஆனால் கதை பிரச்னையால் அந்த படம் டிராப் ஆனது. இதன் காரணமாக சில ஆண்டுகளாக எந்த படமும் இயக்காமல் இருந்து வந்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனின் 23வது படம் மற்றும் சல்மான்கான் நடிப்பில் சிக்கந்தர் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், விரைவில் கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2005ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கஜினி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அதையடுத்து 2008ம் ஆண்டில் அப்படத்தை ஹிந்தியில் அமீர் கானை வைத்து ரீமேக் செய்தார். இப்படியான நிலையில் தற்போது கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை அமீர்கானை வைத்து ஹிந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. சல்மான்கான் நடிப்பில் அவர் இயக்கி வரும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கஜினி -2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.