குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி உள்ள வேட்டையன் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நடித்த ஓரளவு பிரபலமில்லாத, தமிழுக்கு புதிதான நட்சத்திரங்கள் கூட நன்கு வெளிச்சம் பெற்றுள்ளனர். அப்படி இந்த படத்தில் ஆரம்பக் காட்சிகளிலேயே ஒரு தாதாவாக வந்து போலீஸ் அதிகாரியான ரஜினியின் என்கவுன்டருக்கு பலியாகும் சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மலையாள வில்லன் நடிகர் சாபுமோன் அப்துசமது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றவர்.
இந்த நிலையில் வேட்டையன் படம் மூலம் மட்டுமல்லாது சமீபத்தில் கேரளாவில் கைது செய்யப்பட்ட போதை பொருள் கடத்தல் தாதா ஓம் பிரகாஷ் என்பவருடன் தொடர்புபடுத்தி சர்ச்சையில் சிக்கிய பிசாசு பட நடிகை பிரயாகா மார்ட்டினுக்கு சட்ட ரீதியான உதவிகளை செய்து அந்த சிக்கலில் இருந்து அவர் வெளியே வர உதவி செய்ததற்காகவும் கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்திகளில் அடிபட்டு வருகிறார் சாபுமோன்.
இந்த நிலையில் முதன்முறையாக இயக்குனராகவும் அடி எடுத்து வைத்துள்ளார் சாபுமோன். இந்த படத்தில் கதாநாயகியாக அதே பிரயாகா மார்ட்டின் தான் நடிக்கிறார். இவர் சாபுமோனின் நெருங்கிய குடும்ப நண்பரும் கூட. அடிப்படையில் சட்டம் படித்தவரான சாபுமோன் தனது முதல் படமும் நீதிமன்றத்தை மையப்படுத்திய படமாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.