'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள குணசித்ர நடிகை மாலா பார்வதி. தமிழில் இது என்ன மாயம், நிமிர், மாரா, எப்ஐஆர், அன்னபூரணி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக இவர் மதுரையில் தங்கி இருந்தார்.
அப்போது காலை 11.50 மணியளவில் மாலா பார்வதிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய ஒரு நபர், தாங்கள் ஒரு கூரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் அனுப்பப்பட்ட ஒரு பார்சலில் எம்டிஎம்ஏ போதைப்பொருள் இருப்பதாகவும், இதனை நாங்கள் போலீசில் ஒப்படைத்தால் பெரிய பிரச்சினையை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும்” என்று கூறியுள்ளார். ஆனால், தான் யாருக்கும் பார்சல் அனுப்பவில்லை என்று மாலா பார்வதி கூறினார்.
சிறிது நேரத்திற்கு பிறகு மும்பை போலீஸ் அதிகாரி என்று கூறி ஒருவர் மாலா பார்வதிக்கு போன் செய்து அவரது வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். இதில் சந்தேகமடைந்த மாலா பார்வதி, உடனடியாக இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து அவர் கூறும்போது “மும்பை போலீஸ் என்று கூறி என்னை பல மணி நேரம் மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தனர். போலீஸ் அதிகாரி என்று கூறிய நபர் அனுப்பி வைத்த அடையாள அட்டையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக அவரது போன் இணைப்பை துண்டித்து விட்டேன்” என்றார்.
இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளிக்கவில்லை. என்றாலும் இதுபோன்ற மோசடி ஆசாமிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.