ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
2024ம் ஆண்டில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளதென்பது வருடத்தின் ஆரம்பத்திலேயே எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றபடி பல முக்கியமான படங்கள் வெளியாகின. அஜித் நடிக்கும் எந்த ஒரு படமும் மட்டும் இந்த வருடம் வெளியாக வாய்ப்பில்லை என்பதே இப்போதைய நிலவரம்.
இந்த ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களில் 'அரண்மனை 4, மகாராஜா, இந்தியன் 2, ராயன், தங்கலான், தி கோட், வேட்டையன்' ஆகிய படங்கள் 100 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்த படங்களாக உள்ளன. இதுவரையிலும் சுமார் 180 படங்கள் வரை வெளியாகி உள்ளன. அவற்றில் 7 படங்கள் மட்டுமே 100 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்துள்ளது என்பது அதிர்ச்சியான ஒன்றுதான்.
100 கோடிக்கு அதிகமாக வசூலித்தாலும் அவை எவ்வளவு லாபம் கொடுத்தன என்பதுதான் முக்கியம். அந்த விதத்தில் ஒரு சில படங்கள் மட்டுமே ஒட்டு மொத்தமாக குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்துள்ளன. அதே சமயம் 25 கோடி, 50 கோடி வசூலித்த சில படங்கள் 100 கோடி படங்களை விடவும் அதிக லாப சதவீதத்தைக் கொடுத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். அடுத்த சில வாரங்களில் வெளியாக உள்ள சில படங்கள் 100 கோடியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருட முடிவில் 10 படங்கள் அந்த சாதனையைப் பெற்றால் அதுவே அதிகமானதுதான்.