கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்துள்ள படம் அமரன். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் இந்த அமரன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட அமரன் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது 48வது படத்தில் நடிக்க இருந்தார் சிம்பு. பட்ஜெட் காரணமாக அந்த படம் கைவிடப்பட்டது. அதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைப் படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருகிறார்.