போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் |

பிரபல சின்னத்திரை தொகுப்பாளரான மா.கா.பா ஆனந்த் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மா.கா.பா ஆனந்த் தொகுப்பாளராக பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் உடற்பயிற்சி விழிப்புணர்வு செய்யப்போவதாக அனுமதி வாங்கிவிட்டு, ஸ்ட்ரீட் டே கொண்டாட ஏற்பாடு செய்ததாகவும் அதுவும் கடைசி சமயத்தில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இதனால் ஏமாந்து போன மக்கள் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் உட்பட 50 பேர் மேல் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




