ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

2000த்தில் பிசியான மலையாள நடிகையாக இருந்தவர் ஜோதிர்மயி. 'தலைநகரம்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அவர், பின்னர் நான் அவனில்லை, சபரி, பெரியார், வெடிகுண்டு முருகேசன், சிவலிங்கம் ஐபிஎஸ், அறை எண் 305ல் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
பின்னர் தயாரிப்பாளர் நிஷாந்த் ஹரிகுமாரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு அமல்நீரத் என்ற ஒளிப்பதிவாளரை திருமணம் செய்து கொண்டார். தற்போது 11 வருடங்களுக்கு பிறகு 'போகைன் விலியே' என்ற மலையாள படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இந்த படத்தில் நடிக்கும் ஜோதிர்மயியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இந்த படத்தில் பஹத் பாசில், குஞ்சாகோ போபன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜோதிர்மயின் இரண்டாவது கணவர் அமல் நீரத் இயக்குகிறார். வருகிற 17ம் தேதி படம் வெளிவருகிறது.




