புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ஹிந்தியில் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதன்பிறகு தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த ஞாயிறன்று துவங்கியது. அதேபோல ஹிந்தியிலும் பிக்பாஸ் சீசன்-18 நிகழ்ச்சியும் வழக்கம் போல நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்க அதே ஞாயிறன்று கோலாகலமாக துவங்கியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் முதன்முறையாக ஒரு தமிழ் சினிமா பிரபலம் இந்தி பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக பங்கேற்று இருப்பது தான். அவர் வேறு யாரும் அல்ல பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா அர்ஜுன் தான்.
தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு ஜோடியாக 'ஸ்ரீ' என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் 'ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் கடந்த சில வருடங்களில் 'குக் வித் கோமாளி' ரியாலிட்டி ஷோ மூலமாக ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமான இவருக்கு தற்போது ஹிந்தி பிக்பாஸ் சீசனிலேயே கலந்து கொள்ளும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் ஸ்ருதிகா என்ட்ரி கொடுத்த போது அங்குள்ள பார்வையாளர்களை பார்த்து வணக்கம் என தமிழில் கூறியதுடன் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான சல்மான் கானையும் வணக்கம் தமிழ்நாடு என கூற வைத்தார். ஒரு தமிழ் போட்டியாளராக ஹிந்தி பிக்பாஸில் இவர் எப்படி கலக்குகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.