சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு | நடிகை ரம்யா மீது அவதூறு தாக்குதல் : இதுவரை நடிகர் தர்ஷினின் 12 ரசிகர்கள் கைது | மலையாள திரையுலகை பிடித்து ஆட்டும் கேமியோ ஜுரம் | முதலில் ‛பியார் பிரேமா காதல்' இப்போது ‛பியார் பிரேமா கல்யாணம்' | ஜெயிலர் 2 படத்தில் சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி தரும் வித்யாபாலன் |
ஆளும் மத்திய பா.ஜ., அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். சமீபகாலமாக லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர், நடிகர் பவன் கல்யாண் உடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் பா.ஜ.வை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். மேலும் அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோருடன் இருக்கும் போட்டோவையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
அந்த போட்டோவை மேற்கொள் காட்டி ‛எனிமி, மார்க் ஆண்டனி' போன்ற படங்களை தயாரித்த வினோத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு : ‛‛உங்களுடன் அமர்ந்திருக்கும் மூன்று பேரும் தேர்தலில் ஜெயித்தவர்கள். ஆனால் நீங்கள் டெபாசிட் இழந்தவர், அதுதான் வித்தியாசம். என்னுடைய படத்தின் ஷூட்டிங்கின் போது உங்களால் ரூ.1 கோடி நஷ்டம் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டீர்கள். இதுபற்றி கேட்டதற்கு போனில் பேசுவதாக சொன்னீர்கள், ஆனால் பேசவில்லை. இந்த சம்பவம் 2024, செப்., 30ல் நடந்தது. அன்றைய தினம் 1000 துணை நடிகர்கள் இருந்தார்கள். 4 நாட்கள் உங்களுக்கு படப்பிடிப்பு இருந்தது. ஆனால் வேறு ஒரு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததால் நீங்கள் சென்றுவிட்டீர்கள். அதனால் அன்றைய தினம் படப்பிடிப்பு நின்றதோடு எனக்கு பெரும் நஷ்டமும் ஏற்பட்டது'' என தெரிவித்துள்ளார்.