ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழில் ஒளிபரப்பான அண்ணாமலை, கோலங்கள், மந்திரவாசல் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து பிரபலமானவர் மஞ்சரி. மஞ்சரிக்கு தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த போதிலும் அவர் தொடர்ந்து சீரியலில் நடிக்கவில்லை. அதற்கு காரணம் மஞ்சரி சிங்கப்பூரில் வசித்து வந்தார். சீரியல் ஷூட்டிங் பொழுதுகளில் மட்டும் தமிழகம் வந்து நடித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஊடகத்தில் பேட்டி கொடுத்துள்ள அவர், மொட்டத்தலையுடன் காட்சியளிக்கிறார். இதற்கு காரணம் என்ன? என்று அவரிடம் கேட்ட போது, 'சிங்கப்பூரில் குழந்தைகள் கேன்சர் சொசைட்டி உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது தலைமுடி உதிர்ந்துவிடும். அவர்களுக்கு நிறையபேர் முடியை தானமாக கொடுப்பார்கள். நானும் வருடத்திற்கு ஒரு முறை எனது முடியை அந்த குழந்தைகளுக்கு டொனேஷன் செய்து வருகிறேன்' என்று கூறியுள்ளார். மஞ்சரியின் இந்த செயலை தற்போது பலரும் வாழ்த்தி வருகின்றனர்.