அடுத்தாண்டு ஏப்., 10ல் ‛இட்லி கடை' ரிலீஸ் | கங்கை நதி கரையில் நடந்த ரம்யா பாண்டியன் திருமணம் : யோகா மாஸ்டர் லோவலை மணந்தார் | 5 முறை தற்கொலை முயற்சி? - கண்கலங்க வைத்த சத்யா | சுந்தரி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீகோபிகா | குழந்தைக்கு 'நிலா' என பெயர் சூட்டிய ரித்திகா | குட் நியூஸ் சொன்ன நிவேதிதா - சுரேந்தர் | ஓடிடியில் வந்தது 'வேட்டையன்': தாமதமாகும் 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | 50வது நாளில் 'லப்பர் பந்து' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'அமரன்' | 'பான் இந்தியா', சூர்யாதான் இன்ஸ்பிரேஷன் - ராஜமவுலி பேச்சு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார். ஏழு பாகங்களின் வெற்றிக்குப் பிறகு, பிக்பாஸ் 8ம் சீசனுக்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
இதனையடுத்து, எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு சமையல் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் இருக்கிறது. இருப்பினும் இது ரியாலிட்டி ஷோ என்பதனுடன் போட்டியாளர்களின் மனநிலை, ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை கணித்து அவர் சுவாரஸ்யமாக நிகழ்ச்சியை கொண்டு செல்வாரா என்பது போக போக தெரியவரும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கோலாகலமாக இன்று (அக்.,6) துவங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்குள் களமிறங்குகின்றனர்.
01. முதல் போட்டியாளர் தயாரிப்பாளர் ரவீந்திரன்
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சென்றார். தமிழ் சினிமாவில் பேட்மேன் என அழைக்கப்படும் இவர் நளனும் நந்தினியும், முருகங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்தும், சில படங்களை வெளியிட்டும் இருக்கிறார். இடையில் மோசடி வழக்கில் சிறை சென்றது, நடிகை மகாலட்சுமி உடனான திருமணம் போன்ற சர்ச்சைகளில் சிக்கினார். அதோடு, இதற்கு முன்னர் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளை பற்றி தொகுத்து வழங்கி உள்ளார். அதனால் சில சர்ச்சைகளிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
02. மகாராஜா சாச்சனா
நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளராக நடிகை சாச்சனா உள்ளே சென்றார். இவர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் அவரது மகளாக நடித்தவர் ஆவார்.
03. நடிகை தர்ஷா குப்தா
நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாளராக நடிகை தர்ஷா குப்தா உள்ளே நுழைந்துள்ளார். கோவையை சேர்ந்த தர்ஷா டிவி சீரியல்களில் நடித்து வந்தார். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார். சினிமா, டிவியை தாண்டி வலைதளங்களில் இவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
04. நடிகர் சத்யா
நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளராக நடிகர் சத்யா சென்றுள்ளார். வளர்ந்து வரும் நடிகரான இவர் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். பின்னணி பாடகி ரம்யாவின் கணவர் ஆவார். பாடகி ரம்யாவும் ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
05. டிவி நடிகர் தீபக்
பிக்பாஸில் ஐந்தாவது போட்டியாளராக நடிகர் தீபக் சென்றுள்ளார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுந்து வழங்கி உள்ளார். பிற டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். குறிப்பாக ஏராளமான டிவி சீரியல்களிலும் நடித்து இருப்பவர் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
06. ஆர்ஜே., நடிகை ஆனந்தி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது போட்டியாளராக நடிகை ஆனந்தி போட்டியின் உள்ளே சென்றார். ஆர்ஜே.,வாக பணியாற்றும் இவர் கோமாளி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
07. பாடகர் ஜெப்ரி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது போட்டியாளராக கானா பாடகர் ஜெப்ரி சென்றுள்ளார்.
08. டிவி நடிகை சுனிதா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது போட்டியாளராக விஜய் டிவி பிரபலமான சுனிதா சென்றுள்ளார். டிவியில் வரும் நடன நிகழ்ச்சி மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சமீபகாலமாக படங்களிலும் தலைகாட்டி வருகிறார்.
09. நடிகர் ரஞ்சித்
நிகழ்ச்சியில் 9வது போட்டியாளராக நடிகர் ரஞ்சித் சென்றுள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் நாயகனாகவும், வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியிலும் முக்கிய வேடத்தில் இவர் நடித்துள்ளார்.
10. டிவி நடிகை பவித்ரா ஜனனி
பிக்பாஸின் 10வது போட்டியாளராக டிவி நடிகை பவித்ரா ஜனனி உள்ளே நுழைந்துள்ளார். இவர் ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.
11. சவுந்தர்யா
நிகழ்ச்சியின் 11வது போட்டியாளராக சவுந்தர்யா சென்றுள்ளார். மாடலிங் செய்து வந்த இவர் இப்போது டிவி நிகழ்ச்சி, சீரியல்களில் தலைகாட்டி வருகிறார்.
12. டிவி நடிகர் அருண் பிரசாத்
நிகழ்ச்சியின் 12வது போட்டியாளராக டிவி நடிகை அருண் பிரசாத் உள்ளே நுழைந்துள்ளார். இவர் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் டிவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
13. டிவி நடிகை தர்ஷிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 13வது போட்டியாளராக டிவி நடிகை தர்ஷிகா உள்ளே சென்றுள்ளார். இவர் விஜய் டிவியின் சீரியல்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் நெகட்டிவ்வான வேடங்களில் இவர் நடித்து வருகிறார்.
14. விஜே விஷால்
நிகழ்ச்சியின் 14வது போட்டியாளராக வீஜே.,வும், டிவி நடிகருமான விஷால் பங்கேற்றுள்ளார். ஆரம்பத்தில் வீஜே.,வாக பணியாற்றி வந்த இவர் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமானார். அடுத்தக்கட்டமாக சினிமாவில் பயணிக்க இந்தவொரு மேடையை பயன்படுத்த இருப்பதாக விஷால் தெரிவித்துள்ளார்.
15. நடிகை அன்ஷிதா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15வது போட்டியாளராக நடிகை அன்ஷிதா சென்றார். விஜய் டிவியின் ‛செல்லம்மா' சீரியல் மூலம் பிரபலமான இவர் கேரளாவை சேர்ந்தவர். சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று அசத்தினார்.
16. நடிகர் அர்னவ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது போட்டியாளராக டிவி நடிகர் அர்னவ் உள்ளே சென்றார். விஜய் டிவியின் செல்லம்மா சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். டிவி நடிகை திவ்யா ஸ்ரீதர் உடனான திருமண சர்ச்சையில் சிக்கியவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.
17. பேச்சாளர் முத்துக்குமரன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக பேச்சாளர் முத்துக்குமரன் என்ட்ரியாகி உள்ளார். இவரின் தமிழ் மொழிப்பற்று அனைவரையும் பாராட்ட வைத்தது. பல்வேறு மேடை பேச்சுகள், பட்டிமன்றங்களில் இவரது தமிழ் பேச்சு பலரையும் கவர்ந்தது. இதுதவிர வீஜே.,வாக பல்வேறு யுடியூப் தளங்களில் பணியாற்றி உள்ளார்.
18.வீஜே ஜாக்குலின்
நிகழ்ச்சியின் கடைசி மற்றும் 18வது போட்டியாளராக வீஜே ஜாக்குலின் களமிறங்கி உள்ளார். விஜய் டிவியில் கேபிஒய் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமான இவர், ‛தேன்மொழி' சீரியலிலும் நடித்தார். அதன்பின் கோலமாவு கோகிலா படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாகவும் நடித்து புகழ் பெற்றார்.
18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி உள்ளது. இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற டைட்டில் உடன் துவக்கி உள்ளனர். போட்டி, விதிமுறை எல்லாம் மாற்றப்பட்டுள்ளது. முதல்நாளிலேயே போட்டியாளர்களை ஆண்கள், பெண்கள் என பிரிக்கப்பட்டு, வீட்டின் நடுவே இரு கோடுகள் அமைக்கப்பட்டு இரு குழுக்களுக்கும் பெட்ரூம்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. கமல் இடத்தில் விஜய் சேதுபதி உள்ளார். அவர் எந்த மாதிரியான போட்டியாளர்களை கையாள போகிறார், நிகழ்ச்சியை எந்தளவுக்கு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல போகிறார். போட்டியாளர்களில் யார் 100 நாட்கள் தங்கி டைட்டில் வின்னர் ஆக போகிறார்கள் என்பது இனி வரும் அடுத்த 100 நாட்களில் தெரிந்துவிடும்.