குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
தனுஷ், நித்யா மேனன் நடித்த 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம் பெற்ற 'மேகம் கருக்காதா' பாடலுக்கு சிறப்பாக நடனம் அமைத்ததற்காக நடன இயக்குனர்கள் ஜானி, சதீஷ் கிருஷ்ணன் ஆகியோருக்கு 2022ம் ஆண்டிற்கான 70வது தேசிய விருதுகளில் சிறந்த நடன இயக்குனருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடனப் பெண் ஒருவர் ஜானி மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேசிய விருதை வாங்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் கேட்டிருந்தார் ஜானி. அவருக்கு அக்டோபர் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.
போக்சோவில் கைதான ஜானி, இடைக்கால ஜாமின் பெற்று தேசிய விருது வாங்கப் போவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது தேசிய விருதுகளின் பெருமையைக் குலைப்பதாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவருக்கு வழங்க இருந்த தேசிய விருதை மறுஉத்தரவு வரும் வரையில் ரத்து செய்வதாக தேசிய திரைப்பட விருதுகள் குழுமம் அறிவித்துள்ளது.
டில்லியில் அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு ஜானிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்பப் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். அதற்கான கடித நகல் சிறையில் உள்ள ஜானிக்கு சிறை கண்காளிப்பாளர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால், தேசிய வருது வாங்குவதற்காக ஜானிக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமின் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.