'வேட்டையன்'-ஐ சமாளிப்பாரா 'மார்ட்டின்' ? | சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து விலகினாரா கோமதி ப்ரியா? | பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்ததால் வருத்தப்பட்டேன் - சரண்யா துராடி | மீனா தொடருக்கு எண்ட் கார்டா? | பெண் அமைச்சர் மீது 100 கோடி நஷ்ட ஈடு வழக்கு : நாகார்ஜூனா தகவல் | 'இளையராஜா' படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதும் எஸ்ரா | கவின் பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண் | 'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம் | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! |
தென்னிந்தியத் திரையுலகத்தில் அக்டோபர் 10ம் தேதி மிகப் பெரும் வெளியீடாக ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படம் வெளியாக உள்ளது. இருந்தாலும் அக்டோபர் 11ம் தேதி 'பிளாக்' தமிழ்ப் படமும், பான் இந்தியா வெளியீடாக வர உள்ள கன்னடப் படமான 'மார்ட்டின்' படமும் வெளியாக உள்ளன.
'கேஜிஎப்' படங்களுக்குப் பிறகு கன்னடத் திரையுலகத்தில் அதிக பட்ஜெட் படங்கள் வருடத்திற்கு ஒன்றிரண்டாவது வெளியாகின்றன. அப்படி ஒரு படமாக 'மார்ட்டின்' படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்கள். கர்நாடகாவைப் பொறுத்தவரையில் இப்படம் அதிக தியேட்டர்களில் வெளியாகலாம். இருந்தாலும் ரஜினிகாந்த் நடிக்கும் படம் வருகிறதென்றால் பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களில் அப்படத்திற்குத்தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கும்.
பிறமொழிப் படங்களை வெளியிடும் மாநிலங்களான கேரளா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் ரஜினி படத்திற்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும். அந்தப் போட்டியை 'மார்ட்டின்' சமாளிக்குமா என்பது சந்தேகம்தான். துருவ் சர்ஜா, வைபவி சாண்டில்யா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நடிகர் அர்ஜுன் இப்படத்திற்கு கதை எழுதியிருக்கிறார்.