ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடிகையாக இருந்து வருகிறார் பிரியங்கா மோகன். தற்போது எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கானாவின் தோரூர் பகுதியில் உள்ள கடை திறப்பு விழாவில் இன்று (அக்.,3) அவர் பங்கேற்றார். அப்போது அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் பிரியங்கா மோகன் உட்பட மேடையில் இருந்த அனைவரும் கீழே விழுந்தனர். எதிர்பாராத இந்த விபத்தில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பிரியங்கா மோகன் வெளியிட்ட பதிவு: தோரூரில் நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் நடந்த விபத்தில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். என்மீது அன்பும் அக்கறையும் கொண்ட அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.