5 முறை தற்கொலை முயற்சி? - கண்கலங்க வைத்த சத்யா | சுந்தரி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீகோபிகா | குழந்தைக்கு 'நிலா' என பெயர் சூட்டிய ரித்திகா | குட் நியூஸ் சொன்ன நிவேதிதா - சுரேந்தர் | ஓடிடியில் வந்தது 'வேட்டையன்': தாமதமாகும் 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | 50வது நாளில் 'லப்பர் பந்து' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'அமரன்' | 'பான் இந்தியா', சூர்யாதான் இன்ஸ்பிரேஷன் - ராஜமவுலி பேச்சு | எளிமையாக நடைபெற்ற 'பிக்பாஸ்' பிரதீப் ஆண்டனி திருமணம்: நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் | ஏழு மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் அறிவிப்பு: ஆச்சரியப்படுத்திய 'தக் லைப்' |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'.
இப்படம் பான் இந்தியா படமாக வெளியானாலும் தமிழகத்தில் மட்டுமே பெரும் வரவேற்பைப் பெற்றது. இங்கு மட்டும் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சுமார் 100 கோடி ரூபாயை பங்குத் தொகையாகக் கொடுத்தது என்பது கோலிவுட் தகவல். மற்ற மாநிலங்களில் எதிர்பார்த்த அளவு போகவில்லை.
படம் வெளியாகி நான்கு வாரங்கள் ஆன நிலையில் நாளை அக்டோபர் 3ம் தேதி ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. ஓடிடி தளத்தில் இப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.