ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கன்னடத்தில் வெளியான இந்த படம் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாகி அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்த் உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்கள் மட்டுமல்லாது பாலிவுட்டை சேர்ந்தவர்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டினர். தற்போது இந்த படத்தின் ப்ரீக்வல் ஆக 'காந்தாரா சாப்ட்டர் 1' என்கிற பெயரில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரிஷப் ஷெட்டி.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் கன்னடத் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இதில் ரிஷப் ஷெட்டியின் தந்தை கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரிஷப் ஷெட்டி தனது மனைவியுடன் மோகன்லாலை சந்தித்தது கூட இந்த படத்தில் நடிப்பதற்கு அவரை அழைப்பதற்காக தான் என்றும் தற்போது சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.