சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் | ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை |
இந்தியன் 2 படத்தை அடுத்து தற்போது ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இதன்பிறகு இந்தியன் 3 படத்தின் பணிகளை தொடங்கும் அவர், அந்த படத்தை முடித்ததும் வேள்பாரி நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான உரிமையை பெற்றுள்ள ஷங்கர், சமீபத்தில் கூட இந்த நாவலின் காட்சிகள் சில படங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தவர், இதுபோன்று யாரேனும் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
இதன்காரணமாக அடுத்தபடியாக வேள்பாரி நாவலை உடனடியாக படமாக்குவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில் நடிக்க விக்ரம், சூர்யா ஆகியோரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதோடு இதுவரை தான் இயக்கிய படங்களை விட பிரமாண்டமான ஒரு பான் இந்தியா சரித்திர படமாக இந்த வேள்பாரி நாவலை படமாக்கவும் திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.