யு டியூப் டிரெண்டிங்கில் போட்டி போடும் 'தி கோட், வேட்டையன்' | நடித்த படத்தின் விழாவை புறக்கணித்த ஷெரின், சம்யுக்தா | சரத்குமாருடன் நடிக்கும் சண்முக பாண்டியன் | பழநி பஞ்சாமிர்தம் பற்றி சர்ச்சை : சினிமா இயக்குனர் மோகன்.ஜி கைது | மூன்று மணி நேரம் ஓடப் போகும் 'மெய்யழகன்' | கோலங்கள் தில்லாவுக்கு இந்த வயதில் கல்யாணமா? | கரகாட்டக்காரன் கனகாவா இது? | மணிமேகலைக்கு பதிலடி கொடுத்த பிரபலங்கள் : இப்படியா அசிங்கப்படுத்துவது? | மலையாள பாடல் பாடி மகளை தூங்க வைக்கும் ரன்பீர் கபூர் | சிரிக்காமல் சந்தேகத்துடன் படம் பார்த்த நிகிலா விமல் |
தமிழ் சினிமா பாடல்களில் எந்தப் பாடலுக்கு அதிகம் வரவேற்பு இருக்கிறது என்பதை யு-டியுப்பில் வெளியாகும் அந்தப் பாடல்களின் வீடியோக்களும் தீர்மானிக்கின்றன. இந்த மாதம் வெளியான 'தி கோட்' படத்தில் யுவன் இசையில் வெளிவந்த பாடல்களுக்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்தன.
இருந்தாலும் அப்படத்தின் 3 பாடல்கள் தற்போது யு-டியூப் டிரெண்டிங்கில் டாப் 5ல் இடம் பெற்றுள்ளன. ஒரு வாரம் முன் வெளியான 'விசில் போடு' முழு பாடல் வீடியோ 9 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்திலும், நேற்று வெளியான 'மட்ட' முழு வீடியோ பாடல் 3 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாமிடத்திலும், 'சின்னச் சின்ன கண்கள்' முழு வீடியோ 5 மில்லியன் பார்வைகளுடன் நான்காமிடத்திலும் உள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான 'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' லிரிக் பாடல் 31 மில்லியன் பார்வைகளுடன் டிரெண்டிங்கில் நான்காமிடத்தில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெளியான 'ஹன்டர் வன்டார்' பாடல் 2 மில்லியன் பார்வைகளுடன் ஐந்தாமிடத்திலும் உள்ளன.
'வேட்டையன் Vs தி கோட்' போட்டியை விடவும், அதை 'அனிருத் Vs யுவன்' போட்டியாகத்தான் பலர் சித்தரித்து வருகிறார்கள்.