ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛வேட்டையன்'. அமிதாப் பச்சன், ராணா, பஹத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். லைகா தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். வரும் அக்., 10ல் படம் வெளியாக உள்ள நிலையில் ஏற்கனவே மனசிலாயோ பாடல் வெளியாகி டிரெண்ட் ஆனது.
தொடர்ந்து இன்று(செப்., 20) வேட்டையன் ஹன்டர் என்ற இரண்டாவது பாட்டு வெளியானது. இதன் உடன் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் படத்தின் இசை வெளியீடு நடக்கிறது. மாலை 7 மணியளவில் படத்தின் டீசரை பிரிவியூ என்ற பெயரில் வெளியிட்டனர். இந்தபடம் என்கவுன்டர் தொடர்புடைய கதையில் உருவாகி உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அதை நிரூபிக்கும் விதமாக இந்த டீசர் அமைந்துள்ளது.
1:38 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசரின் துவக்கத்தில் நிறைய போலீஸ் அதிகாரிகள் கூடியிருக்கும் பெரிய அரங்கில் சில என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகளின் படங்களை காண்பிக்கிறார்கள். அதில் ரஜினியின் படமும் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை ரஜினி என்கவுன்டர் செய்வது மாதிரியான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
‛‛என் கவுன்டர் என்ற பெயரில் கொலை செய்வது தான் ஹீரோயிசமா..., என் கவுன்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்குற தண்டனை மட்டுமல்ல, இனிமே இந்த மாதிரி குற்றம் நடக்காமல் இருக்க எடுக்கப்படுற முன்னெச்சரிக்கை நடவடிக்கை'' போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
ரஜினி ஆர்ப்பாட்டம் இல்லாமல் போலீஸ் எஸ்பி ரோலில் நடித்துள்ளார். அமிதாப் பச்சன் மனித உரிமைகள் ஆணைய தலைவராக நடித்திருப்பார் என தெரிகிறது. பஹத் பாசில், ராணா, துஷாரா, ரித்திகா, மஞ்சு வாரியர், கிஷோர் போன்றவர்கள் எல்லாம் டீசரில் சில வினாடிகள் வந்து போகின்றன. அனிருத்தின் பின்னணி இசை டீசருக்கு பொருந்தி இருக்கிறது. தற்போது இந்த டீசர் டிரெண்ட் ஆகி உள்ளது.




