ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல் , விஜய், ரஜினி என தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார். மறுபுறம் லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரிக்க தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2வது படமாக 'பென்ஸ்' என்ற படம் உருவாகிறது என அறிவித்தனர். லோகேஷ் கதையில் உருவாகும் இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கின்றார். தற்போது இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.
இந்நிலையில் இப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த விக்ரம், கைதி, லியோ போன்ற படங்களை போல் எல்சியு எனப்படும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சல் சாயலில் இடம் பெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது.