சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் தற்போது இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக எம்பி.,யாக இருக்கிறார். இவர், இயக்கி, நடித்துள்ள 'எமர்ஜென்சி' படம் செப்.6-ல் வெளியாக இருக்கிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரநிலைப் பிரகடனத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பலத்த எதிர்ப்பு, சீக்கிய அமைப்புகளின் மிரட்டல், தணிக்கை சான்று பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் படம் வெளியிடுவது தாமதமாகி வருகிறது. இந்தப் படத்தை தனது முழு சொத்தையும் விற்று எடுத்திருப்பதாக பல நேர்காணல்களில் கங்கனா கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவர், மும்பை பாந்த்ரா அருகில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட பங்களாவை 32 கோடிக்கு விற்பனை செய்து உள்ளார். இதனை கோவையை சேர்ந்த தொழிலதிபர் சுவேதா என்பவர் வாங்கியுள்ளார். மொத்தம் 3,075 சதுர அடி கொண்ட இந்த பங்களாவில் நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், ஜிம் வசதிகள் உள்ளன. இந்த பங்களாவை 6 வருடத்திற்கு முன்பு 20 கோடிக்கு வாங்கிய கங்கனா தற்போது 12 கோடி ரூபாய் லாபத்தில் விற்று உள்ளார்.
இந்த பங்களாவை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி இன்றி கட்டியிருப்பதாக முன்பகுதியை இடித்தார்கள். இதற்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கங்கனா. இந்த வழக்கில் கங்கனாவுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.