இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
விஜயசேதுபதி-த்ரிஷா நடித்த 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் தற்போது இயக்கியுள்ள படம் ‛மெய்யழகன்'. கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கார்த்தி - அரவிந்த்சாமி இருவரது ஜாலியான சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, கார்த்தி அரவிந்த்சாமியை பார்த்து, அத்தான் நீங்க பீர் அடிப்பீங்களா? என்று கேட்க, அதற்கு அரவிந்த்சாமி வேண்டாம் என்று சொல்வது உள்பட சில உரையாடல் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அவர்கள் சம்பந்தப்பட்ட இந்த காட்சிகளை பார்க்கும்போது இந்த படம் ஒரு குடும்ப கதையில் உருவாகி இருப்பது தெரிகிறது. இப்படம் இம்மாதம் 27ம் தேதி திரைக்கு வருகிறது.