ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தமிழ் சினிமாவில் காமெடி டிராக் எழுதி புகழ்பெற்றவர் ஏ.வீரப்பன். ஆனால் அவர் ஒரு நடிகர் என்பது பலர் அறியாத ஒன்று. 1956ம் ஆண்டு வெளியான 'தெனாலிராமன்' படம் தொடங்கி, கலங்கரை விளக்கம், ஒளிவிளக்கு, குடியிருந்த கோவில், பட்டணத்து ராஜாக்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு காமெடி டிராக் எழுதியுள்ளார். பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், உதயகீதம், இதயகோவில், கரகாட்டக்காரன், சின்னதம்பி போன்றவை அவற்றில் முக்கியமானவை.
இதுதவிர அவர் 'தெய்வீக ராகங்கள்' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், ரோஜா ரமணி, வடிவுக்கரசி நாயகியாகவும் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். காமெடி ஹாரர் ஜானர்னரில் உருவான படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு ஏ.வீரப்பன் படமும் இயக்கவில்லை.
பல வருடங்கள் சினிமாவில் பணியாற்றினாலும் கடைசி காலத்தை வறுமையில் கழித்தார். கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து காமெடி டிராக் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தும், அவரிடமிருந்து எந்த உதவியையும் அவர் பெறவில்லை.