ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் சார்பில் திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா தயாரிக்கும் படம் 'சுப்ரமண்யா'. நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர் மகன் அத்வே நாயகனாக அறிமுகமாகிறார். மற்ற நடிகர் நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. பி.ரவிசங்கர் இயக்குகிறார், ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார், விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ரவிசங்கர் கூறும்போது “படத்தின் பணிகள் தற்போது 60 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மும்பையில் உள்ள ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் கை வண்ணத்தில் உருவாகிறது. பேண்டசி த்ரில்லர் ஜார்னரில் படம் தயாராகிறது. தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது” என்றார்.