10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

வாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் உதய் மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிக்கும் படம் 'மார்டின்'. நடிகர் அர்ஜூன் படத்தின் கதையை எழுதியுள்ளார். ஏ.பி.அர்ஜூன் இயக்கி உள்ளார். துருவா சார்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் உள்பட பலர் நடிக்கிறார்கள். ரவி பஸ்ரூர் பின்னணி இசை அமைக்கிறார். பாடல்களுக்கு மணி சர்மா இசை அமைக்கிறார்.
இந்த பட விழாவில் அர்ஜூன் பேசியதாவது : என் அன்பான துருவாவை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கு ரெண்டு ரோல், ஒன்று துருவாவின் மாமா. ஆனால் அவனை நான் என் மகனாகத்தான் நினைக்கிறேன். இன்னொன்று திரைக்கதை எழுத்தாளர். 100 கோடிக்கு மேல் செலவு செய்து, ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தர பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். நடிகை வைபவிக்கு என் வாழ்த்துகள். 13 மொழிகளில் இப்படம் ரெடியாகி இருக்கிறது. உலகம் முழுக்க யார் பார்த்தாலும், இந்தப் படம் பிடிக்கும். ஆக்ஷன் எமோஷன் என எல்லாம் இருக்கிறது. வித்தியாசமான திரைக்கதையை கொண்ட இந்த படம், துருவாவிற்கு பெரிய பிளாக்பஸ்டர் ஆக இருக்கும். என்றார்.




