பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தேவரா. கே.ஜி.எப், சலார் புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதன் மூலம் தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் இன்று (செப்-2) தனது தாயின் பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடகாவில் உள்ள அவரது சொந்த ஊரான குந்தபுராவிற்கு நேரில் சென்று தனது தாயின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார் ஜூனியர் என்டிஆர். அப்படியே கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்து வந்துள்ளார். இந்த தரிசனத்தின் போது அவருடன் நடிகர் ரிஷப் ஷெட்டி, இயக்குநர் பிரசாந்த் நீல் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். தரிசனம் முடித்து வந்த ஜூனியர் என்டிஆர் ரிஷப் ஷெட்டி, பிரசாந்த் நீல் மற்றும் கேஜிஎப் பட தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.