2025 பொங்கல் போட்டியில் அப்பா, மகன்? | தனது முந்தைய வசூலை முறியடிப்பாரா 'வேட்டையன் ' ரஜினிகாந்த் | 'வேட்டையன்' படமே கடைசி : வீடுகளாக மாறப் போகும் உதயம் தியேட்டர் | 'தேவரா' வசூல், வரவேற்பு : வருத்தத்தில் என்டிஆர் | குறைந்து போன ஓடிடி, சாட்டிலைட் உரிமை விற்பனை | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் மிஷ்கின் | இயக்குனர் ஆனார் பிரபல படத்தொகுப்பாளர் | பிளாஷ்பேக் : ‛டேய் இது இங்கிலீஷ் குரூப்புடா...' - பொன்மனச் செல்வன் படப்பிடிப்பில் விஜயகாந்த் கலாட்டா | தன் பெயரில் பண மோசடி விளம்பரம் : பாடகி சித்ரா எச்சரிக்கை | தாதாவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டேனா? - பிரயாகா மார்டின் விளக்கம் |
மலையாள சினிமாவில் போதை பார்ட்டி நடத்தியவர் நடிகை ரீமா கல்லிங்கல் அவரின் சினிமா வாழ்க்கை அடிபட்டதே அவர் நடத்திய போதை பார்டியால் தான் என தெரிவித்துள்ளார் பாடகி சுசித்ரா.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல பாடகியாக இருந்தவர் சுசித்ரா. சில ஆண்டுகளுக்கு முன் நடிகர்களின் அந்தரங்க விஷயங்களை வெளிப்படுத்தி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். ஆனால் அதை தான் வெளியிடவில்லை, எனது வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டது என தெரிவித்தார். சில ஆண்டுகாலம் அமைதியாக இருந்தவர் சமீபத்தில் தனது முன்னாள் கணவர் கார்த்திக் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறியதோடு தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பற்றியும் பல விஷயங்களை பேசினார். இதனால் மீண்டும் அவரை பரபரப்பு தொற்றிக் கொண்டது. தொடர்ந்து பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் மலையாளத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் பிரச்னையை முதலில் பேச ஆரம்பித்தது நடிகைகள் பார்வதி, ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் உருவாக்கிய பெண்கள் பாதுகாப்பு அமைப்பினால் தான். அதன்பின் தான் ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது. சமீபத்தில் அந்த கமிஷன் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி அறிக்கையாக வெளியிட்டது. இதற்கு பின் பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை தைரியமாக பேசி வருகின்றனர். ஆனால் நடிகை ரீமா ஒன்றும் நல்லவர் கிடையாது, அவர் போதை பார்டி நடத்தியவர் என குற்றம் சாட்டி உள்ளார் சுசித்ரா.
இதுபற்றி ஆங்கில சேனல் ஒன்றில் வெளியாகி உள்ள பேட்டியில் அவர் கூறியதாவது : ‛‛நடிகை ரிமா கல்லிங்கல் சினிமா கேரியர் அடிபட்டதற்கு காரணமே அவர் ஏற்பாடு செய்த போதை பார்ட்டி தான். அந்த பார்ட்டியில் நிறைய இளம் பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டு போதைக்கு அடிமையானார்கள். கொச்சியில் ரீமா, அவரின் பாய் பிரண்ட் அபு ஆகியோர் வீட்டில் ரெய்டு நடந்தது. அவரை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை. அவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு என்ன செய்தார்கள். அவர்கள் தான் புதிது புதிதாக டிரக்ஸை கொண்டு வந்தார்கள். அவுங்க பார்ட்டிக்கு போற மலையாள இசையமைப்பாளர்கள் நிறைய பேர் என்னிடம் இதுபற்றி சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் தரும் சாக்லைட்டை நாங்கள் தொட மாட்டோம் என்பார்கள். நடிகர்களே சிலர் இரண்டு லைன் (போதை) நான் அடிக்கவில்லை என்றால் என்னால் நடிக்க முடியாது, செட்டுக்கே வர முடியாது என்பார்கள்'' என தெரிவித்துள்ளார்.
சுசித்ரா பேசிய இந்த வீடியோ வலைதளத்தில் வைரலாகி வருவதோடு இதுபற்றிய ரீமாவிடம் ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை என கேட்டு வருகிறார்கள்.