அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
'ஆர்ஆர்ஆர்' நடிகரான ஜூனியர் என்டிஆர், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டிஆரின் பேரன், நடிகர் ஹரிகிருஷ்ணாவின் மகன் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஹரிகிருஷ்ணாவின் இரண்டாவது மனைவியான ஷாலினியின் மகன்தான் ஜூனியர் என்டிஆர். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். தாத்தாவின் பாசத்தைப் பெற்றவர் என்பதால் அவர் சொல்லித்தான் அவருடைய பெயரான நந்தமூரி தாரக ராம ராவ் என்று சொல்லாமல் அவரை ஜூனியர் என்டிஆர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அப்பாவின் மறைவுக்குப் பிறகு என்டிஆர் குடும்பத்தால் சற்றே விலக்கி வைக்கப்பட்டார் ஜூனியர் என்டிஆர் என்பது தகவல்.
தனது அம்மாவின் நீண்ட நாள் கனவு ஒன்றை ஜூனியர் என்டிஆர் நிறைவேற்றியுள்ளார். அது குறித்து, “என்னை அம்மாவின் சொந்த ஊரான குந்தபுராவுக்கு அழைத்துச் சென்று, உடுப்பி ஸ்ரீகிருஷ்ண மட கோவிலில் தரிசனம் செய்ய வைக்க வேண்டும் என்ற அம்மாவின் கனவு நனவானது. செப்டம்பர் 2ம் தேதி அவரது பிறந்தநாளுக்கு முன்பாக இது நடைபெற்றது. இதை விட சிறந்த பிறந்தநாள் பரிசை நான் தந்திருக்க முடியாது. விஜய் கிரகந்தூர், எனது அன்புக்குரிய நண்பன் பிரசாந்த் நீல் ஆகியோர் என்னுடன் இணைந்து இதை நடத்தித் தந்தனர். எனது அன்பான ரிஷப் ஷெட்டிக்கும் நன்றி. இந்தத் தருணத்தை மிகவும் சிறப்பாக்கித் தந்து ஆதரவளித்தார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கோயில் மடாதிபதிகள் அவரை வரவேற்ற, அவர் அங்கு ரிஷப் ஷெட்டி, பிரசாந்த் நீல் ஆகியோருடன் உணவருந்திய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைராகி உள்ளன.