டிரஸ் வாங்க பணமின்றி புரமோஷனுக்கு படப்பிடிப்பு உடைகளையே அணிந்த விஜய் தேவரகொண்டா | திரிஷ்யம் 3 ரிலீஸ் முதலில் மலையாளத்தில்.. பிறகுதான் ஹிந்தியில் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | உன்னி முகுந்தன் விலகிய நிலையில் மார்கோ 2ம் பாக டைட்டில் அறிவிப்பு | மீண்டும் வெளியாகும் அவதார் வே ஆப் வாட்டர் | பிளாஷ்பேக் : தோல்வி அடைந்த 3டி படம் | பிளாஷ்பேக்: ஆர்.எஸ்.மனோகர் நாயகனாக நடித்த லக்ஷ்மி | பாகுபலி பாணியில் உருவாகி இருக்கும் மோகன்லாலின் விருஷபா | ரோபோ சங்கர் மறைவு : அரசியல் தலைவர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் இரங்கல் | ரோபோ சங்கர் மறைவு : திரையுலகினர் அஞ்சலி | ரோபோ சங்கர் மறைவு : மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன.? |
சமீப காலமாக இளம் முன்னணி இயக்குனர்கள் இங்குள்ள முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கும்போது மற்ற மொழிகளில் இருக்கும் பிரபல முன்னணி நட்சத்திரங்களை அழைத்து வந்து சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்கும் புது ட்ரெண்டிங்கை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் ஆகியோரை அழைத்து வந்து ரஜினியுடன் நடிக்க வைத்தார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். அந்தவகையில் தற்போது கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து பல கலர்புல்லான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அது மட்டுமல்ல மறைந்த நடிகர் விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் மோகன்லால் ஒரு முக்கிய சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. காரணம் சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் மோகன்லாலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படி திடீரென அவர் இந்த புகைப்படத்தை வெளியிடுவதற்கு காரணம் இந்த படத்தில் மோகன்லால் நிச்சயமாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பதால் தான் என ரசிகர்களாக தங்கள் யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். படம் வெளியாவதற்கு முன்பே சஸ்பென்ஸ் உடையும் என எதிர்பார்க்கலாம்.