விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் |

ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது. பாலியல் புகாரால் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதுகுறித்து விசாரிக்க கேரள அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட நடிகைகள் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், நடிகருமான சித்திக் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸ் நிலையத்தில் இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். மேலும் மின்னஞ்சல் மூலமாக, மாநில டி.ஜி.பி.க்கும் அவர் புகார் மனுவை அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் “2016ம் ஆண்டு திருவனந்தபுரம் மங்கட் ஓட்டலில் வைத்து நடிகர் சித்திக் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வெளியே சொன்னால் நடப்பதே வேறு என மிரட்டியதாகவும்” தெரிவித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து நடிகர் சித்திக் மீது மியூசியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சித்திக் தவிர இயக்குனர் ரஞ்சித், நடிகர்கள் ஜெயசூர்யா, மணியன் பிள்ளைராஜு, இடவேள பாபு, இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் உள்பட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் மணியன் பிள்ளைராஜு, இடவேள பாபு ஆகியோர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.




