பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வரும் படம் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. சுருக்கமாக தி கோட் என அழைக்கின்றனர். இதில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்திற்கு தணிக்கை யு/ஏ சான்றிதழ் என அறிவித்தனர். முதலில் இப்படம் மொத்தம் 2 மணி நேர 58 நிமிடங்கள் நீளம் கொண்டதாக வெளியாகிறது என தகவல்கள் வெளியானது. இப்போது மீண்டும் சில காட்சிகளை இப்படத்தில் இணைத்து சென்சார் செய்துள்ளனர். இப்போது இத்திரைப்படம் 3 மணி நேர 3 நிமிடங்கள் கொண்ட படமாக தணிக்கைகை செய்யப்பட்டுள்ளது.




