ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டி படு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்ந்து பலரும் கைதாகி வருகின்றனர். பலரும் விசாரணை வளையத்தில் உள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் என்பவருடன் இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா போனில் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து அவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கு ஒன்று தொடர்பாக இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
இதனிடையே மோனிஷாவின் வங்கி கணக்கில் இருந்து கிருஷ்ணனுக்கு ரூ.75 லட்சம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் இது முற்றிலும் ஆதரமற்ற செய்தி என விளக்கம் அளித்தார் மோனிஷா. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நெல்சனிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள போவதாக தகவல் வெளியானது. தற்போது அவரிடமும் தனிப்படை போலீசார் 1 மணிநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை, அடையாறில் உள்ள நெல்சனின் வீட்டில் இந்த விசாரணை நடந்துள்ளது.