கர்நாடக இசைப்பாடகி எஸ்.ஜே.ஜனனியின் 3 டாட் ரெக்கார்டிங் ஸ்டுடியோஸ் திறப்பு : கலைஞர்கள் பங்கேற்பு | டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த கர்நாடகா அரசு | சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறிய ஐஸ்வர்ய லட்சுமி | பிரச்சனை முடிந்து திரைக்கு வந்தது 'தணல்' | ‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு |
தமிழ் சினிமாவில் பல புதிய முன்னெடுப்புகளைச் செய்தவர், செய்து வருபவர் கமல்ஹாசன். 'அவிட் எடிட்டிங், டிஜிட்டல் சினிமா' என சில உதாரணங்களை அதற்குச் சொல்லலாம். சினிமாவில் வரும் புதிய வளர்ச்சி, புதியவர்களின் எண்ணங்களுக்கு எப்போதும் தனது ஆதரவைத் தெரிவிப்பவர்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சூரி, அன்னா பென் மற்றும் பலர் நடிப்பில் நாளை(ஆக., 23) வெளியாக உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தைப் பார்த்த பின் அதைப் பாராட்டி நேற்று ஒரு நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அக்கடிதத்தின் கடைசி இரண்டு வரிகளான, “சாளரமல்லாத சிறையாக தமிழ் சினிமாவை பழைய வர்த்தகர்கள் வைத்திருக்க முடியாது. புதிய பார்வையாளர்களும், புதிய படைப்பாளர்களும் பல்கி விட்டார்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது அந்த வரிகள் சினிமாவிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய சினிமா வியாபாரிகளின் கைகளில் இனி சினிமா இருக்காது. புதிதாக இயக்க வருபவர்கள், சினிமாவைப் புதிதாக ரசிப்பவர்கள் அதிகம் வந்துவிட்டார்கள்,” என்பதுதான் அதன் எளிய வார்த்தை வடிவம்.
கமல்ஹாசன் பொதுவாக அப்படி குறிப்பிட்டிருந்தாலும் அவர் சிலரை நோக்கித்தான் அந்த வார்த்தைகளைச் சொல்கிறார் என்பது பலருக்கும் புரிந்துவிட்டது. அவரது வரிகள் சில சீனியர் சினிமாக்காரர்களைக் கிண்டலடிப்பதாகவே உள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதில் சில சீனியர் இயக்குனர்களும் அடக்கம்.