ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் சில தெலுங்குப் படங்களும், ஹிந்தியில் பான் இந்தியா படமான 'சாவா' படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால், அன்றைய தினம் 'புஷ்பா 2' வெளியாக வாய்ப்பில்லை, எனவேதான் மற்ற படங்களின் அறிவிப்பு வெளியாகி வருகிறது என்று டோலிவுட்டில் சொன்னார்கள்.
இதனிடையே, 'மாருதி நகர் சுப்பிரமணியம்' என்ற படத்தின் நிகழ்ச்சியில் இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜூன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சுகுமார், “ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க நாங்கள் இடைவிடாமல் உழைத்து வருகிறோம். சில காட்சிகளை எடுக்க அதிக நேரமாகிறது. அதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை, அதனால்தான் தாமதம் ஏற்படுகிறது. அல்லு அர்ஜூனின் நடிப்பும், படமும் சிறப்பாக இருக்கும்” என்று பேசியுள்ளார். மேலும், படம் திட்டமிட்டபடி டிசம்பர் 6ம் தேதி வெளியாகும், வெளிவரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.