நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
அஜித் நடித்து வரும் படம் 'விடாமுயற்சி'. மகிழ்திருமேனி இயக்குகிறார், லைகா நிறுவனம் தயாரிக்கிறது. த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, நிகில், ரவி ராகவேந்திரா, சஞ்சய், ரம்யா, காசிம், ஜவன்ஷிர், ரஷாத் சபராலியேவ், விதாதி ஹசனோவ், துரல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும் ஏராளமான புதுமுகங்கள் ஆடிசன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அவர்களில் கணேஷ் மற்றும் தஸ்ரதி என்ற இருவரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் மகிழ்திருமேனி கூறும்போது “கணேஷ் மற்றும் தஸ்ரதியின் கதாபாத்திரங்கள் சிறியதாக இருந்தாலும் படத்தின் கதைக்கு முக்கியமானவை. அதனால், ஆடிஷன் மூலம் திறமையான நபர்களைத் தேர்ந்தெடுத்தோம். அனைத்து நடிகர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்வதில் அஜித்தும் ஆர்வம் காட்டி வருகிறார்.
அதனால்தான் அவர்களுக்கென தனிப்பட்ட கேரக்டர் போஸ்டர்களை வெளியிடும் யோசனையை அவர் முன்மொழிந்தார். வளர்ந்து வரும் நடிகர்களான கணேஷ் மற்றும் தஸ்ரதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அஜித்திடம் இருந்து பாராட்டுக்களை வாங்கினார்கள். படம் வெளியான பிறகு இவர்களின் நடிப்பு மக்களின் கவனத்தை ஈர்க்கும் என்பது உறுதி” என்றார்.