விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பாடகி பி. சுசீலா வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த இசையரசி P.சுசீலாம்மா , சிகிச்சைக்கு பின் இப்போது நலமாக வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து பி.சுசீலா வெளியிட்டுள்ள வீடியோவில், காவேரி மருத்துவமனையில் மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொண்டு சிறப்பான சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும் ,செவிலியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை நெகிழ்ச்சியுடன் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் காட்டிய பாசத்திற்கும் அக்கறைக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது.
நான் நலம் பெற பிரார்த்தனை செய்த கோடானுகோடி அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இவ்வாறு அந்த வீடியோவில் பி.சுசீலா தெரிவித்துள்ளார்.