பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
2022ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 70வது தேசிய விருதுகள் அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது 'திருச்சிற்றம்பலம்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நித்யாவுக்கும், 'குச் எக்ஸ்பிரஸ்' என்ற குஜராத்தி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மானஸிக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தேசியம், சமூகம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை சிறந்த முறையில் வெளிப்படுத்திய படத்திற்கான விருது, சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது, சிறந்த நடிகைகக்கான விருது என 'குச் எக்ஸ்பிரஸ்' படம் 3 தேசிய விருதுகளை வென்றது. குஜராத்தி மொழியில் நடித்தற்காக ஒரு குஜராத்தி நடிகை தேசிய விருது பெறுவது இதுவே முதல் முறை.
மானஸி பரேக் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது ஒரு தமிழ்ப் படத்தில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். மும்பையில் பிறந்து வளர்ந்த குஜராத்திப் பெண் மானஸி. டிவி தொடர்களில் நடித்துப் பிரபலமானவர். 2005ம் ஆண்டில் 'இந்தியா காலிங்' என்ற டிவி ஷோவில் வெற்றி பெற்றவர். டிவி ஷோக்கள் சிலவற்றிலும் பங்கேற்றார். அதன்பின்தான் அவரைத் தேடி சினிமா வாய்ப்புகள் வந்தன.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், 2012ம் ஆண்டில் வெளிவந்த 'லீலை' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் மானஸி பரேக். அந்தப் படத்தில் ஷிவ் பண்டிட் கதாநாயகனாக அறிமுகமானார். சந்தானம் நகைச்சுவை நடிகராக நடித்த படம். அந்தப்படம் வெளிவந்தது பலருக்கும் தெரியாது. படம் முடிந்தும் இரண்டு வருடங்கள் வெளியாகாமல் இருந்து, பின்னர் வெளியானது. அப்படத்திற்குப் பிறகு மானஸி தமிழில் நடிக்கவேயில்லை. ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்துவிட்டு பின் குஜராத்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 'டு நாட் டிஸ்டர்ப்' என்ற குஜராத்தி வெப் சீரிஸ் ஒன்றையும் தயாரித்துள்ளார்.
2008ல் திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தாயாக உள்ளவர் மானஸி. திருமணத்திற்குப் பிறகும் நடிகைகள் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதற்கு மானஸியும் ஒரு உதாரணம்.