சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் பலர் நடிப்பில், யுவன் இசையமைப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி கோட்' படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியானது. நேற்று மாலை 5 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்த டிரைலர் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' பட டிரைலர் புரிந்த 24 மணி நேர சாதனைகளையும் முறியடித்து தமிழ்ப் படங்களின் டிரைலர்களிலும் புதிய சாதனையைப் படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய டிரைலர்களின் மொத்த பார்வைகளையும் சேர்த்து 39 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 1.65 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் டிரைலருக்கு மட்டும் 33 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது. ஹிந்தி டிரைலர் 3.5 மில்லியன், தெலுங்கு டிரைலர் 2.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன.
இதற்கு முன்பு வெளிவந்த தமிழ் டிரைலர்களில் 24 மணி நேரத்தில், 'லியோ' 32.7 மில்லியன், பீஸ்ட் 29.7 மில்லியன், 'துணிவு' 26 மில்லியன், 'வாரிசு' 24 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது.
டிரைலர் வருவதற்கு முன்பு 'தி கோட்' படத்தின் 'ஹைப்' குறைவாகவே இருந்தது. டிரைலருக்குப் பின்பு அது அதிகமாகியுள்ளது. ஓரிரு நாளில் இந்த டிரைலர் மூன்று மொழிகளிலும் சேர்த்து 50 மில்லியனைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.