தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள ‛தி கோட்' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரைலர் இதுவரை யூடியூப்பில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும், இப்படத்தின் ஸ்பார்க் என்ற பாடல் வெளியானபோது அதில் விஜய்யின் டீஏஜிங் தோற்றம் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் கோட் படத்தின் டீசரில் விஜய் நடித்துள்ள இரண்டு தோற்றங்களும் வரவேற்பு பெற்றுள்ளது.
குறிப்பாக இளம் வயது விஜய்யின் தோற்றம் சிறப்பாக இருப்பதாக பாராட்டப்பட்டு வருகிறது. இப்படத்தில் மைக் மோகன் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். மேலும், இதற்கு முன்பு விஜய் நடித்த சில படங்களின் மேனரிஷத்தை படம் முழுக்க பயன்படுத்தியுள்ளார் வெங்கட்பிரபு. முக்கியமாக சில தினங்களுக்கு முன்பு வெளியான சூர்யாவின் கங்குவா டிரைலர் கடந்த ஐந்து நாட்களில் வாங்கிய லைக்குகளை விஜய்யின் கோட் பட டிரைலர் மூன்றரை மணி நேரத்தில் முறியடித்திருக்கிறது.