விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'தி கோட்' படம் செப்டம்பர் 5ம் தேதி பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்தைப் பெரிய அளவில் வெளியிட படத்தை வாங்கியுள்ள அந்தந்த வினியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளார்களாம். தமிழக உரிமையை வாங்கியுள்ள ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பட வெளியீடு பற்றிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் உரிமையாளரான ராகுல், “அந்த ஏரியா, இந்த ஏரியா, ஆல் ஏரியாஸ் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் அனைத்துத் தியேட்டர்களிலும் செப்டம்பர் 5 முதல் 'தி கோட்' படம் திரையிடப்படுகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் படத்தின் ஆரம்ப நாட்களின் வசூல் புதிய சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் படத்திற்கான சிறப்புக் காட்சிகள், ரசிகர் மன்றக் காட்சிகளின் முன்பதிவும் ஆரம்பமாகியுள்ளது.