ஹிப்ஹாப் ஆதி தயாரித்த “பொருநை” ஆவணப்படம்: சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு | 'மஞ்சணத்தி' படத்தில் இணைந்த பிரபலங்கள் | லட்சுமி காந்தன் கொலை வழக்கு பட தகவல்கள் திட்டமிட்டு மறைப்பு | புர்ஜ் கலீபாவில் வீடு வாங்கிய மோகன்லால் | சினிமாவில் வெற்றி பெற முடியாமல் போனது ஏன்? : மனம் திறந்த விக்னேஷ் | பிளாஷ்பேக் : பாலமுரளி கிருஷ்ணா இசையமைத்த தமிழ் படம் | பிளாஷ்பேக் : தேசிய விருது பெற்ற 'தங்கப்பதுமை' | 'ரஜினிகாந்த் 173': இயக்குனர் மீண்டும் மாற்றம்? | 'பெத்தி' - எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா? | பிறந்தநாளில் குவிந்த ரசிகர்கள் : வாழ்த்து மழையில் இளையராஜா |

தமிழ் திரை உலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் சசிகுமார். சசிக்குமார், சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் 50 கோடிக்கும் மேல் வசூலித்து நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து சசிக்குமார் நடித்துள்ள ப்ரீடம் ஆகஸ்ட் 14 திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வலைதளத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சசிகுமார். அதன் உடன், ‛‛எங்க வயலில் நடவு. வயலும் வாழ்வும்'' என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகின. மதுரையை சேர்ந்த சசிகுமார் தனது சொந்த ஊரில் விவசாய நிலங்கள் வைத்துள்ளார். அதில் விவசாயமும் செய்து வருகிறார்.




