‛பெத்தி' ஓடிடி விற்பனை எவ்வளவு | 7 வருடங்களுக்குப் பிறகு தேவ் பட இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு! | ரஜினி - கமல் இணையும் படம்: இன்று அறிவிப்பு வெளியாகிறது? | தனுஷ் 55 படப்பிடிப்பு நாளை முதல் துவங்குகிறது | டாக்சிக் டீசர் நாளை வெளியாகிறது | நடிகை டூ ஓவியக் கலைஞர்: ஷாம்லியின் தனித்துவ வளர்ச்சி | கெணத்த காணோம் : வடிவேலு காமெடி டயலாக்கில் யோகிபாபு படத் தலைப்பு | பிளாஷ்பேக் : நீச்சல் உடையில் பரபரப்பு கிளப்பிய அமலா | 4 புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் காந்தி கிருஷ்ணா | பிளாஷ்பேக்: எக்ஸ்பிரஸ் கவிஞர் |

விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா ஆகியோர் நடிப்பில் உருவான படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தை மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்திருந்தார். இந்நிலையில் அவர் அடுத்தபடியாக ஆர்யா நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். நேற்று சென்னையில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இப்படத்தை ஆர்.ஜே .பாலாஜி நடித்த ரன் பேபி ரன் என்ற படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். லூசிபர், எம்புரான் போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதிய முரளி கோபி இப்படத்திற்கும் திரைக்கதை எழுதுகிறார். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்களை நடிகர் ஆர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




