நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் | இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது |
'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதற்கடுத்து தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' ஆகிய படங்களை இயக்கினார். அவரது இயக்கத்தில் சிறுவர்கள் நடித்துள்ள 'வாழை' படம் இந்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது.
அதோடு தற்போது துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் 'பைசன்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்த பின் தனுஷ் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். அதற்கடுத்து கார்த்தி நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
'வா வாத்தியாரே, மெய்யழகன்' ஆகிய படங்களில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். தற்போது 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு 'கைதி 2' படத்தில் நடிக்க உள்ளார். 'கூலி' படத்தை இயக்கி முடித்த பின் லோகேஷ் கனகராஜ் 'கைதி 2' படத்தை இயக்கலாம் எனத் தெரிகிறது.
கார்த்தியிடம் படத்தின் கதையை ஐந்தே நிமிஷத்தில் சொல்லி முடித்திருக்கிறார் மாரி செல்வராஜ். அதற்கே ஆச்சரியப்பட்ட கார்த்தி ஓகே சொல்லிவிட்டார் எனத் தகவல்.