நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த தில் ராஜூ தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. கடந்த சில வருடங்களாகத் தயாரிப்பில் இருந்த படம் எப்போது வரும் என தெலுங்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
'இந்தியன் 2' படம், 'கேம் சேஞ்சர்' படம் இரண்டு படங்களையும் ஷங்கர் மாறி மாறி படப்பிடிப்பு நடத்தி வந்தாலும், வேறு சில பல காரணங்களாலும் இப்படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டே வந்தது. சமீபத்தில் ராம் சரண் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தது. மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடந்தால் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும்.
இதனிடையே, நேற்று ஐதராபாத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகி உள்ளது. அதற்கான பூஜையும் நடந்தது. அதில் தயாரிப்பாளர் தில் ராஜூ கலந்து கொண்டார். தொடர்ந்து மற்ற வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். இந்த வருட கிறிஸ்துமஸ் நாளில் இப்படம் வெளியாகிறது.