ஸ்பெயின் பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | மீண்டும் தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரண் | பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி | ‛தி கோட்' - ஜீவனுக்கு முதலில் உருவாக்கிய விஜய்யின் தோற்றம் வைரல் | ரஜினி உடன் மட்டும் வந்த கிசு கிசு : நடிகை லதாவே அளித்த பதில் | வேட்டையன் மூலம் மீண்டும் வெளிச்சம் பெறுவாரா ரக்ஷன் ? | அடுத்தடுத்த துயரங்களில் குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு மம்முட்டி ஆறுதல் | டொவினோ தாமஸ் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் மீது மலையாள நடிகை தாக்கு | இயக்குனர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காசி இயக்குனர் | மின்னல் முரளி கதாபாத்திரங்களை பயன்படுத்த நீதிமன்றம் தடை |
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் மழை பிடிக்காத மனிதன். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது, குறிப்பாக ரசிகர்களின் இத்தனை நாள் எதிர்பார்ப்பை ஈடு செய்யத் தவறியது என்றே சொல்லலாம். அதற்கு முதல் காரணமாக படத்தில் விஜய் ஆண்டனி குறித்த கதாபாத்திரம் யார் என்கிற உண்மையை ஒரு நிமிட வீடியோ மூலம் ரசிகர்களுக்கு ஆரம்ப காட்சியிலேயே கூறி விடுகிறார்கள். இதனால் படம் பார்க்கும்போது அவர் யார் என்று தெரிந்து கொண்டே படம் பார்ப்பதால் அடுத்தடுத்த காட்சிகளில் அவர் மீதான சுவாரஸ்யம் ரசிகர்களுக்கு ஏற்படவில்லை.
ஆனால் இந்த ஒரு நிமிட காட்சி தனது கவனத்திற்கு வராமலேயே சேர்க்கப்பட்டுள்ளது என்றும், சென்சார் சான்றிதழ் பெற்றபின் இப்படி ஒரு புதிய காட்சியை சேர்த்தனர் என்றும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்தார் விஜய் மில்டன். அதேசமயம் படத்தின் தயாரிப்பாளர் தரப்பிற்கும் விஜய் மில்டனுக்கும் பல நாட்களாக இந்த படம் தொடர்பாக இருந்த கருத்து வேறுபாடு காரணமாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இது போன்ற ஒரு நிமிட காட்சியை உருவாக்கி சேர்த்து இருக்கிறார்கள் என்றே சொல்லப்பட்டது. அது மட்டுமல்ல விஜய் ஆண்டனியின் குற்றச்சாட்டை தொடர்ந்து தயாரிப்பாளர் தரப்பு இது குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளிக்க ஒரு பத்திரிக்கையாளர் சந்திபிறகும் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் பின்னர் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதாவது, சென்சார் செய்யப்பட்ட பிறகு இப்படி ஒரு காட்சியை சென்சார் அனுமதி இல்லாமல் சேர்ப்பது தவறு என்றும் அப்படி சேர்த்து இருந்தாலும் அதற்கு தனியாக சென்சார் பெற வேண்டும் என்றும் அப்படி செய்யாமல் தயாரிப்பாளர் செய்தது நிச்சயம் கேள்விக்கு ஆளாகும், நாளை இதுகுறித்து நீதிமன்ற நடவடிக்கை கூட எடுக்கப்பட நேரலாம் என தெரிய வந்த தயாரிப்பாளர் தரப்பு, இந்த ஒரு நிமிட காட்சியால் படத்திற்கு வந்த எதிர்மறை விமர்சனம் காரணமாகவும் இதனால் ஏற்பட்ட சலசலப்பு காரணமாகவும் தற்போது அந்த காட்சியை படத்திலிருந்து நீக்கி உள்ளது.
இதனை தொடர்ந்து இயக்குனர் விஜய் மில்டன் இந்த காட்சியை நீக்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் எல்லாமே படத்தின் நலம் கருதித்தான் நடந்தது என்றும் மேலும் இந்த பிரச்சனையில் தலையிட்டு சமரசம் செய்து வைத்த நடிகர் சரத்குமாருக்கு மிகவும் நன்றி என்றும் கூறியுள்ளார்.